Loading Now

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சொத்திற்கு பட்டா மாற்றம் செய்ய சட்டப்படி தடை!

சிவில் நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும் வரை பட்டா வழங்க வட்டாட்சியர், ஆர்.டி.ஓவுக்கு அதிகாரம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

1 நேரடி அத்துமீறல் விவகாரம்: திருமங்கலம் பத்திரப்பதிவு மற்றும் சர்வே எண் 6/9 சர்ச்சை!

இவ்வளவு சட்டங்களும், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளும் திட்டவட்டமாக உள்ள சூழலில், மதுரை மாவட்டம் திருமங்கலம் பத்திர பதிவு மற்றும் வருவாய்த்துறையில் கிரிய கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சர்வே எண் 6/9 நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு எண்: 194/2015 சிவில் வழக்கு விசாரணையில் நிலுவையில் உள்ள நிலைபிலும், விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாகப் பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான அத்துமீறல் செயலாகும்.

1. வகுவாய்த்துறை விதிகள் (Patta Pass Book Rules)

கோவை நிருபர்: ஒரு நிலம் அல்லது அசையா சொத்து தொடர்பாக

நீதிமன்றத்தில் சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் காலக்கட்டத்தில், அந்தச் சொத்துக்குப் பட்டா மாற்றம் செய்வது சட்டப்படி செல்லாது என்றும், வருவாய்த்துறை விதிகளின்படி அது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு பட்டா பாஸ் புச் சட்டம் (Tamil Nadu Patta Pass Book Act) ஆணைகள் (RSO) மிகத் தெளிவாகக் கூறுகின்றன. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்ய சட்டத்தில் இடமில்லை.

2. அதிகார வரம்பு மீறல் (Jurisdiction Limits)

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு (வட்டாட்சியர் / RDO) P சொத்தின் மூல உரிமையை (Title / Ownership) தீர்மானிக்கும் அதிகாரம் சட்டப்படி கிடையாது. அந்த முழு அதிகாரமும் உரிமையியல் (சிவில்) நீதிமன்றத்திற்கு மட்டுமே உரியது. எனவே, உரிமை கோரி வழக்கு நடக்கும் சூழலில் பட்டா வழங்குவது நீதிமன்ற அதிகார வரம்பிற்குள் அத்துமீறி தலையிடுவதாகக் கருதப்படும்.

சொத்து தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகி மட்டுமே பரிகாரம் பெற வேண்டும் குறுக்குவழியில் வருவாய்த்துறை மூலம் பட்டா பெற முயலக்கூடாது’சென்னை உயர் நீதிமன்றம்.

3. நீதிமன்றத் தடை உத்தரவு (Injunction / Status Quo)

நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சொத்தின் மீது ‘தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்’ (Status Quo) என்றே அல்லது ‘பட்டா மாற்றம் செய்யக்கூடாது’ என்றே இடைக்காலத் தடை ஆணை பிறப்பித்திருந்தால், அதை மீறி பட்டா மாற்றம் செய்வது கடுமையான நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court) குற்றமாகும்.உண்மை மறைத்துப் பட்டா பெற்றால் எடுக்கவேண்டிய நடவடிக்கை:

1. நீதிமன்ற மனு: சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில் உண்மை மறைக்கப்பட்ட விவரங்களைத்

தெரிவித்து உடனடி மனு தாக்கல் செய்யலாம்.

2. RDO மேல்முறையீடு: வருவாய் கோட்டாட்சியரிடம் (RDO)

உடனடியாக மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையைச் கட்டிக்காட்டி அந்த முறைகேடான போலிப் பட்டாவை ரத்து செய்யக் கோரலாம்.

3. சட்ட விதிவிலக்கு: வழக்கு நடக்கும் நீதிமன்றமே

வெளிப்படையாக ‘பட்டா மாற்றத்திற்குத் தடை இல்லை’ என்று தீர்ப்பளித்தால் மட்டுமே அதிகாரிகள் அதனைப் பரிசீலிக்க முடியும்.

சட்ட எச்சரிக்கை மதுரை திருமங்கலம் தாலுகா கிரிய கவுண்டன்பட்டி கிராம சர்வே எண் 6/9 விவகாரத்தில் வழக்கு 194/2015 நிலுவையில் இருக்கும்போது செய்யப்பட்ட இந்த மாறுதலுக்கு எதிராக உடனடியாக கோட்டாட்சியரிடமும் உயர் நீதிமன்றத்திலும் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்ய சட்டரீதியான முகாந்திரம் உள்ளது.

Share this content:

Post Comment

You May Have Missed