புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி பாகூரில் ஐந்தாம் கட்ட போராட்டம்.

சிறப்புரை கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் அவர்கள், எழுச்சி உரை சேர்மன் RL வெங்கட்டராமன் அவர்கள்.புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும் , உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், தொடர் போராட்டங்களை மக்கள் முன்னேற்ற கழகம் நடத்திக் கொண்டு வருகிறது. இதுவரை நான்கு கட்டங்களாக உழவர்களை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் கட்டமாக ஓர் எழுச்சிப் போராட்டம் பாகூரில் 8.10.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு பாகூர் சிவன் கோயில் அருகில் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்பாக கழகத்தின் சேர்மன் *RLV* முன்னிலையில் கழகத்தின் தலைவர் மு. ராமதாஸ் அவர்கள் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இப்போராட்டத்திற்கு மாநில இணை செயலாளர் GD இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில உதவி செயலாளர் இதயவேந்தன் இணைப்புறை ஆற்றினார். முன்னாள் வார்டு உறுப்பினர் S.தனஞ்ஜெயன்மாநில செயலாளர் பரந்தாமன் , துணை செயலாளர் கலியபெருமாள், அணி செயலாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்ட களத்திற்கு வந்திருந்த அனைவரையும் அணி தலைவர் GC சந்திரன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் எ.மு.ராஜன் நோக்க உரை ஆற்றினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் கருத்துரை ஆற்றினார். கழகத்தின் சேர்மன் R L வெங்கட்டராமன் எழுச்சி உரை ஆற்றினார். அப்போது புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததை கண்டித்து மக்கள் முன்னேற்ற கழகம் தொடர் போராட்டம் அறிவித்து நடத்துவதை பார்த்துதான், இதுவரை வாய் மூடி மௌனியாக இருந்த எதிர் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை பற்றி பேச ஆரம்பித்துள்ளன. இதற்கு மேலும் புதுச்சேரி அரசு அலட்சியமாக இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் என்று எழுச்சி உரை ஆற்றினார்.கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் அவர்கள் போராட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசுகையில் எல்லா விஷயத்திலும் தமிழகத்தை பின்பற்றி நடக்கும் புதுச்சேரி , உள்ளாட்சி தேர்தல் தேதி தமிழகத்தில் அறிவிக்க தயாராகி விட்டார்கள் . புதுச்சேரியின் நிலை என்ன ? இனிமேலாவது புதுவை அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு.அழுத்தம் கொடுத்து சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் நித்தியானந்தன், ரவிகுமார், ராதாகிருஷ்ணன், விமலா பெரியான்டி, காளாபட்டு குமார், நாகமுத்து, விஜயகுமார்,சரவணன், வக்கீல் கார்த்திகேயன்,கோமதி, கௌரி, சுலோச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில உதவி செயலாளர் ஆண்டாள் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். போராட்டத்தில் அணித்தலைவர்கள் , கழக உறுப்பினர்கள், மற்றும் ஊர் மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர்.

Share this content:

Post Comment

You May Have Missed