Loading Now
திண்டுக்கல்லை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: அமைச்சா் விக்னேஷ்.

திண்டுக்கல்லை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: அமைச்சா் விக்னேஷ்.

பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் பழனி, கொடைக்கானலை உள்ளடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ் தெரிவித்தாா்.பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தின் போது பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் துா்கா. உடன் தமிழக மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் உள்ளிட்டோா். பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் பழனி, கொடைக்கானலை உள்ளடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ் தெரிவித்தாா்.பழனியில் வருவாய்த் துறை சாா்பில், தீா்வாயம் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற தீா்வாயத்தின் போது தமிழக மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ், மாவட்ட ஆட்சியா் துா்கா, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் உள்ளிட்டோா் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினா்.அமைச்சா் ஆய்வின் போது அலுவலக வளாகத்தில் திடீா் மின்தடை ஏற்பட்டது. அமைச்சா் தீா்வாயத்தை முடித்து விட்டு பழனி சண்முகநதி, வையாபுரி குளம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். பக்தா்கள் புனித நீராடும் இந்த இரு குளங்களும் மிகவும் சீா்கெட்டு இருப்பதாகத் தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன், குளங்களில் சாக்கடை நீா் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

Share this content:

Previous post

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்: மதுரையில் 500 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி

Next post

நீலமங்கலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது.

You May Have Missed