Loading Now

எடப்பாடியில் அனுமதியின்றி இயங்கிய 4 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆவணியூர் மற்றும் ஜலகண்டாபுரம் சாலை பகுதிகளில், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த 4 சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இடித்து தரைமட்டமாக்கினர்.பொதுமக்கள் புகார்சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சரபங்கா ஆற்றின் கரையோரங்களில் சட்டவிரோதமாக சாயப்பட்டறைகள் இயங்குவதாகவும், அவற்றிலிருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயன சாயக்கழிவுகள் நேரடியாக ஆற்றில் திறந்து விடப்படுவதாகவும் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.விவசாய நிலங்கள் பாதிப்புஇந்த சாயக்கழிவுகள் நிலத்தடி நீரிலும், அருகில் உள்ள கிணற்று நீர்நிலைகளிலும் கலந்ததால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ந்து புகார்களை அனுப்பி வந்தனர்.அதிகாரிகள் அதிரடி சோதனைபொதுமக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் இப்ரான் மற்றும் எடப்பாடி வட்டாட்சியர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று (செவ்வாய்கிழமை) எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆவணியூர் மற்றும் ஜலகண்டாபுரம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.கட்டிடங்கள் இடிப்புஅப்போது, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக சாயப்பட்டறைகள் இயங்குவது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, காவல்துறை பாதுகாப்புடன், அங்கு இயங்கி வந்த வேலுமணி, சுமதி, ஆறுமுகம், தர்மலிங்கம் ஆகியோருக்கு சொந்தமான 4 சாயப்பட்டறைகளின் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அதிகாரிகளால் முழுமையாக இடித்து அகற்றப்பட்டன.அதிகாரிகள் எச்சரிக்கைவிதி முறை களை மீறி, நீர்நிலைகளை மாசுபடுத்தும் வகையில் சாயப்பட்டறைகளை இயக்குபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையின் போது எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this content:

Previous post

மழையால் வாய்க்காலில் ஓடும் தண்ணீரின் அளவை விட நடவு செய்யப்பட்ட வயல்களின் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது: விவசாயிகள் கவலை

Next post

சரக்கு வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து: கிளீனர் பலி.. 40 பயணிகள் காயம்

Post Comment

You May Have Missed